Thursday, July 1, 2010

Part 2- கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள்

சென்ற பதிவில் தற்காலிக கோப்புகள் மற்றும் மென்பொருள் பதிவேடு பற்றிய பராமரிப்பை பார்த்தோம். கணினியில் தகவல்களை அதிகம் பயன்படுத்தும் போது  மற்றும் ஒரு முக்கியமான பராமரிப்பு பணி hard disk-யில் செய்ய வேண்டியது இருக்கும்.

Windows Operating System-தின் மூலம் தகவல்களை சேகரித்தால் அது hard disk-இன் வெவ்வேறு பகுதியில் பதிவாகின்றன. பின்னர் தேவை படும் போது அந்த தகவல்களை திரும்ப பெற Operating System (OS) hard disk-இன் அத்தனை பகுதிக்கும் சென்று தகவலின் துகள்களை சேகரித்துக்கொண்டு வரும். இப்படி ஒவ்வொரு தகவலுக்கும் நடக்கும். இவ்வாறு தகவல்களை hard disk-இன் வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்தால் கணிசமான நேரமும் பிடிக்கும். இக்காரணத்தினால் கணினியின் வேகம் குறைய வாயுப்புகள் அதிகம். 


இதன் தீர்வாக defragmentation-என்கிற ஒருங்கிணைப்பு பராமரிப்பு பணி மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பு பணியின் போது தகவல்கள் hard disk-யில் ஒரே பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்யப் படுகின்றன. இதனால் OS-யினால் தகவல்களை மிக எளிதாக எடுத்துக்கொண்டுவர முடியும். பின்பு கணினியும் அதி வேகமாக செயல்பாடும்.
Auslogic Disk Defragment-என்கிற ஒரு இலவச மென்பொருள் இந்த பராமரிப்பு பணியை திறன்பட செய்யக்கூடியது. இது மற்ற மென்பொருள்களை விட அதிவேகமாக செயல் பட கூடிய ஒன்று. அதனால் தங்கள் பராமரிப்பி பனி மிக சுலபமாகவும் மற்றும் வேகமாகவும் முடிந்துவிடும், Auslogic Disk Defragment-யை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

1. இந்த மென்பொருளை முதலில் நிறுவவும். பின்பு அதனை ஓபன் செய்தால் கீழ் வருமாறு விண்டோ வரும்:



2. Hard Disk-இன் எந்த பகுதியெல்லாம் பராமரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்பு Defarg-என்கிற பட்டனை கிளிக் செய்தால் போதும். அதன் பிறகு மென்பொருளே பராமரிப்பு பணியை முடித்து விடும், பராமரிப்பு பணியின் போது வானவில்லின் வண்ணம் போல ஸ்க்ரீனில் தோன்றும். மிக அருமையாக இருக்கும். மூழு நீல நிறம் வந்து விட்டால் hard disk ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம.



3. Turn off PC after defragementation-என்கிற தேர்வை பயன்படுத்தினால் இந்த பராமரிப்பு பணியை இரவு நேரத்தில் கூட செய்யலாம். Auslogic மேன்போருள் தானாகவே பராமரிப்பு பணியை முடித்துவிட்டு கணினியை shut down செய்து விடும்.

கணினி எந்த தடையுமின்றி இயங்க இந்த அடிப்படை பராமரிப்புகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். CCleaner மற்றும் Auslogic Defrag மென்பொருள்கள் இந்த பராமரிப்பை மிக எளிதாக செய்து விடுகின்றன. இந்த இரண்டு மென்பொருள்களுமே ஒவ்வொருமாதாமும் அதன் வலைப்பக்கத்தில் குறைநீக்கப்பட்ட புது version-களாக update செய்யப்படுகிறது. எனவே அந்தந்த வலைப்பக்கத்தில் சென்று அவ்வப்போது அதன் புது version-களை தரவிறக்கி உபயோகித்தால் சிறப்பான பயன்பாட்டினை பெறலாம்.

கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள் என்பதை ஒரு தொடர் கட்டுரையாக எழுதும் எண்ணம் இருக்கின்றது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து எழுதுவதால் வாரத்திற்கு ஒரு கட்டுரை என எதிர்பார்க்கலாம்.  கிடைக்கும் பின்னூட்டங்களிலிருந்தே வாசகர்களுக்கு  இக்கட்டுரைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இயலும்.  பயனற்றதாக இருப்பின் வேறு தளங்களில் கட்டுரைகள் எழுத முயற்சிக்கலாம்.  எனவே உங்கள் கருத்துக்களை  அவசியம் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.

1 comment:

நளினி சங்கர் said...

கலக்குறீரேய்யா... கம்ப்யூட்டர் மெக்கானிக்...

இது போன்ற கட்டுரைகள் நிச்சயம் பயனுள்ளவைகளே. அவசியம் தொடருங்கள். இன்னும் பிரிச்சி மேய வாழ்த்துக்கள்.

Post a Comment