Friday, December 30, 2011

GMAIL கணக்கு, சேவைகளுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு!


GOOGLE இன் அனைத்து சேவைகளுக்கும் (GMAIL, BLOGGER, ORKUT, GOOGLE+,etc) பாதுகாப்பரணாக ஒரு கடவு ச்சொல் தான் உள்ளது. இதனை மிக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தவறின் பிறிதொருவர் கைகளில் எமது கணக்கு சென்று விடலாம். இதனை அவர் தவறாகப் பயன்படுத்தி பல சிக்கல்களையும் உருவாக்கலாம். இதனைத் தவிர்க்க இப்பொழுது கடவுச் சொல்லுடன் பயன்படுத்த மேலதிக பாதுகாப்பான முறை ஒன்றை GOOGLE  அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடவுச் சொல்லை பதிவு செய்தவுடன் நுழைவுக் குறியீடு தேவைப்படும். இந்த நுழைவுக் குறியீட்டை பதிவு செய்யாமல் GOOGLE சேவைகளை பயன்படுத்த முடியாது! இதன் வழியாக கணக்கின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கிறது. GOOGLE இன் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு உங்கள் கணக்கின் மேலதிக பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நுழைவுக் குறியீட்டைப் பெற அலைபேசி அல்லது தொலைபேசி இருப்பது அவசியம். தொலைபேசி எண்னை பதிவு செய்தால் குரல் அழைப்பு மூலமாக நுழைவுக் குறியீடு அனுப்பப்படும். அலைபேசி எண்னை பதிவு செய்தால் குறுந்தகவல் மூலமாக நுழைவுக் குறியீடு அனுப்பப்படும்.

GOOGLE இந்த பாதுகாப்பை 2-Step Verification என்று குறிப்பிடுகிறது. நுழைவுக் குறியீடு பாதுகாப்பை செயற்படுத்துவது மிக எளிதான காரியம்.

       1. முதலில் கணக்கின் Account Settings யை சொடுக்கவும்

       2. Account Overview யில் உள்ள 2-Step Verification இன் Edit விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்
        3. Setup 2-step Verification விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்
      4.  அலைபேசி என்னை கொடுத்தவுடன் அதனை பரிசோதனை செய்ய Send Code விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்.

     5. அலைபேசிக்கு வந்த குறியீட்டை பதிவு செய்த உடன் அலைபேசி எண்  குறித்த GOOGLE கணக்குடன் பதிவாகிவிடும்.
      6.  கடைசியாக TURN ON 2-STEP Verification விருப்பத் தேர்வினை சொடுக்கினால் போதும், தங்கள் கணக்கிற்கான 2-step பாதுகாப்பு தொடங்கி விடும்.


இந்த நுழைவுக் குறியீடு எண் கிடைக்க பெறாத இடம் அல்லது அலைபேசி இல்லாத நிலையில் குறிப்பிட்ட சில நுழைவுக் குறியீடுகளை எங்களுடன் எழுதி எடுத்து செல்லலாம். ஒரு எண் ஒரு முறை பதிவு செய்தபின் கணக்கை பயன்படுத்த உதவும்.