Friday, December 30, 2011

GMAIL கணக்கு, சேவைகளுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு!


GOOGLE இன் அனைத்து சேவைகளுக்கும் (GMAIL, BLOGGER, ORKUT, GOOGLE+,etc) பாதுகாப்பரணாக ஒரு கடவு ச்சொல் தான் உள்ளது. இதனை மிக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தவறின் பிறிதொருவர் கைகளில் எமது கணக்கு சென்று விடலாம். இதனை அவர் தவறாகப் பயன்படுத்தி பல சிக்கல்களையும் உருவாக்கலாம். இதனைத் தவிர்க்க இப்பொழுது கடவுச் சொல்லுடன் பயன்படுத்த மேலதிக பாதுகாப்பான முறை ஒன்றை GOOGLE  அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடவுச் சொல்லை பதிவு செய்தவுடன் நுழைவுக் குறியீடு தேவைப்படும். இந்த நுழைவுக் குறியீட்டை பதிவு செய்யாமல் GOOGLE சேவைகளை பயன்படுத்த முடியாது! இதன் வழியாக கணக்கின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கிறது. GOOGLE இன் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு உங்கள் கணக்கின் மேலதிக பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நுழைவுக் குறியீட்டைப் பெற அலைபேசி அல்லது தொலைபேசி இருப்பது அவசியம். தொலைபேசி எண்னை பதிவு செய்தால் குரல் அழைப்பு மூலமாக நுழைவுக் குறியீடு அனுப்பப்படும். அலைபேசி எண்னை பதிவு செய்தால் குறுந்தகவல் மூலமாக நுழைவுக் குறியீடு அனுப்பப்படும்.

GOOGLE இந்த பாதுகாப்பை 2-Step Verification என்று குறிப்பிடுகிறது. நுழைவுக் குறியீடு பாதுகாப்பை செயற்படுத்துவது மிக எளிதான காரியம்.

       1. முதலில் கணக்கின் Account Settings யை சொடுக்கவும்

       2. Account Overview யில் உள்ள 2-Step Verification இன் Edit விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்
        3. Setup 2-step Verification விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்
      4.  அலைபேசி என்னை கொடுத்தவுடன் அதனை பரிசோதனை செய்ய Send Code விருப்பத்தேர்வுனை சொடுக்கவும்.

     5. அலைபேசிக்கு வந்த குறியீட்டை பதிவு செய்த உடன் அலைபேசி எண்  குறித்த GOOGLE கணக்குடன் பதிவாகிவிடும்.
      6.  கடைசியாக TURN ON 2-STEP Verification விருப்பத் தேர்வினை சொடுக்கினால் போதும், தங்கள் கணக்கிற்கான 2-step பாதுகாப்பு தொடங்கி விடும்.


இந்த நுழைவுக் குறியீடு எண் கிடைக்க பெறாத இடம் அல்லது அலைபேசி இல்லாத நிலையில் குறிப்பிட்ட சில நுழைவுக் குறியீடுகளை எங்களுடன் எழுதி எடுத்து செல்லலாம். ஒரு எண் ஒரு முறை பதிவு செய்தபின் கணக்கை பயன்படுத்த உதவும்.

Sunday, September 26, 2010

உங்கள்Gmail கணக்கு hack செய்யப்படுகின்றதா? எளிமையான தீர்வு

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்வதினால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை காணமுடிகின்றது. ஆனால் விஞ்ஞானம் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அது நல்லதுக்கு மற்றும் கேட்டது இரண்டுக்குமே பயன்படுகின்றது.  தகவல் தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு பல வேலைகளை எளிதாக்கிவிடுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் மின் அஞ்சல் (e-mail). தனிப்பட்ட மற்றும் அலுவலக தகவல் பரிமாற்றத்திற்கு மின் அஞ்சல் பயன்படுகின்றது.
தற்போது பெரும்பாலனோர் Gmail-ளை உபயோகம் செய்கின்றனர். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் இந்த Gmail, hack-செய்ய(திருட)பட்டாள் எப்படி கண்டுபிடிப்பது?
இதற்காகவே Gmail-லுக்குள் login-செய்த பின்னர், homepage-இல கீழ் பக்கம் ஒரு மென்பொருளினை வைத்திருக்கிறார்கள். “Last account activity” என ஆரம்பிக்கும் அந்த வாக்கியத்தின் முடிவில் “Details” என்கிற வார்த்தை இருக்கும், அதன்மேல் கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் கடந்த பத்து முறை Gmail-ளை பயன்படுத்திய விவரம் கிடைக்கும். அதில் முக்கியமாக IP address மற்றும் உலகத்தில் அது எந்த இடத்தில இருகின்றது என்ற தகவல்கள் இருக்கும்.
வீட்டில் வசதி உள்ளவர்கள் தங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனத்தின் தொலைபேசி வழி உதவியின் மூலம் தங்கள் கணிணியின் IP address–யை தெரிந்துகொள்ளலாம். அலுவலகத்தில் தங்கள் Network Administrator-ரை கேட்டால் IP address தெரிய வரும்.

“Details” –இல கிளிக் செய்த பின்னர் கிடைக்கும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் படும்படியான மாற்றம் தெரிந்தால், அதை உடனே கவனிக்கவும். மாற்றம் இருந்தால் அதற்கு இரண்டு அர்த்தம உண்டு. ஒன்று யாரேனும் தங்கள் கணக்கை hack ¬செய்திருக்கலாம் அல்லது தங்களின் கணக்கு password-யிணை தெரிந்துகொண்டு வேறு யாரேனும் பயன்படுதிருக்கலாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனே நடவெடிக்கை எடுப்பது நல்லது!

Thursday, July 1, 2010

Part 2- கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள்

சென்ற பதிவில் தற்காலிக கோப்புகள் மற்றும் மென்பொருள் பதிவேடு பற்றிய பராமரிப்பை பார்த்தோம். கணினியில் தகவல்களை அதிகம் பயன்படுத்தும் போது  மற்றும் ஒரு முக்கியமான பராமரிப்பு பணி hard disk-யில் செய்ய வேண்டியது இருக்கும்.

Windows Operating System-தின் மூலம் தகவல்களை சேகரித்தால் அது hard disk-இன் வெவ்வேறு பகுதியில் பதிவாகின்றன. பின்னர் தேவை படும் போது அந்த தகவல்களை திரும்ப பெற Operating System (OS) hard disk-இன் அத்தனை பகுதிக்கும் சென்று தகவலின் துகள்களை சேகரித்துக்கொண்டு வரும். இப்படி ஒவ்வொரு தகவலுக்கும் நடக்கும். இவ்வாறு தகவல்களை hard disk-இன் வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்தால் கணிசமான நேரமும் பிடிக்கும். இக்காரணத்தினால் கணினியின் வேகம் குறைய வாயுப்புகள் அதிகம். 

Monday, June 28, 2010

கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள் – பாகம் 1

கணினியை தினமும் பயன்படுத்தினால் அதன் செயல்பாடு திறன் நாள் அடைவில் குறைந்து விடுகிறது, என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அதற்கு முக்கியமான காரணம் operating system-தினால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகள் மற்றும் registry என்கிற மென்பொருள் பதிவேடும் தான். Operating System திறன்பட இயங்க இந்த தற்காலிக கோப்புகள் மிக முக்கியமானவை. ஆனால் அதன் வேலை முடிந்த உடன் தற்காலிக கோப்புகள் தேவையற்ற ஒன்று தான். தொடர் உபயோகத்தினால் தற்காலிக கோப்புகள் மலை போல சேர்ந்து கொண்டே வரும். அதனால் hard disk-யில் இடம் குறைத்து கொண்டே வருவதனால் operating system மெதுவாக இயங்கும். Windows Operating System தானாக எல்லா தற்காலிக கோப்புகளையும் அழிக்காது.

Monday, June 14, 2010

உபுன்டுவை (Edubuntu) பயன்படுத்தி பள்ளிகளில் விளையாட்டின் மூலம் கல்வி

,உலகில் லினக்ஸ்(Linux) என்கிற இலவச operating system-த்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு துறைகளில் இதன் பயன்பாட்டை காணலாம். லினக்ஸ்சில் பல்வேறு சுவைகள் (flavours) உள்ளன. அவர் அவர் தேவைக்கு எற்றார்போல லினக்ஸ் கிடைக்கின்றது. அந்த வரிசையில் வீட்டு உபயோகத்திற்கான மென்போருள்களில் Ubuntu, Fedora, Open SUSE மற்றும் Mandriva போன்றவைகள் மிக பிரபலமானவை.

Saturday, June 5, 2010

ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது - பாகம் 2

சென்ற இடுகையில் ஆடேசிட்டி மென்பொருளினை எவ்வாறு நிருவுவது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது என்று  இந்த பதிவில் பார்போம். டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு மென்பொருள்களையும் முதலில் நிறுவவேண்டும் (install)

உங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உருவாக்க ஒரு எளிமையான மென்பொருள் -அறிமுகம்.

பிடித்தமான பாடல்களில் இருந்து ரிங்டோனை உருவாக்குவது சுலபம் இதற்கு தேவை ஒரு இலவச மென்பொருள் தான். ஆடேசிட்டி  (Audacity) மென்பொருள் இலவச டவுன்லோடாக கிடைக்கிறது  இதனை பயன்படுத்தி mp3 பாடல்களில் இருந்து விருப்பமான ரிங்டோனை கட் செய்து நுன்பேசியில் வைத்துக்கொல்லலாம் . அதுமட்டும் அல்ல மெசேஜ் டோன் கூட செய்யலாம். ஆடேசிடி மென்பொருள் டவுன்லோடு செய்ய இங்கு  கிளிக்கவும் 


ஆடேசிட்டி பாடல்களை திருத்தியமைக்க பயன்படும் மென்பொருள். இதனை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோன கட் செய்வது போன்ற விவரங்கள் மென்பொருளின் உதவி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ரிங்டோன மற்றும் மெசேஜ் டோன் mp3 வடிவில் வேண்டும் என்றால் லாமே (LAME) என்கிற துணை மென்பொருள் தேவை. இதுவும் இலவச டவுன்லோடுதான். லாமேயினை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு மென்பொருட்களையும் பயன்படுத்தும் வழி முறைகள் அடுத்த பதிவுகளில் இடம் பெறும்...