சென்ற பதிவில் தற்காலிக கோப்புகள் மற்றும் மென்பொருள் பதிவேடு பற்றிய பராமரிப்பை பார்த்தோம். கணினியில் தகவல்களை அதிகம் பயன்படுத்தும் போது மற்றும் ஒரு முக்கியமான பராமரிப்பு பணி hard disk-யில் செய்ய வேண்டியது இருக்கும்.
Windows Operating System-தின் மூலம் தகவல்களை சேகரித்தால் அது hard disk-இன் வெவ்வேறு பகுதியில் பதிவாகின்றன. பின்னர் தேவை படும் போது அந்த தகவல்களை திரும்ப பெற Operating System (OS) hard disk-இன் அத்தனை பகுதிக்கும் சென்று தகவலின் துகள்களை சேகரித்துக்கொண்டு வரும். இப்படி ஒவ்வொரு தகவலுக்கும் நடக்கும். இவ்வாறு தகவல்களை hard disk-இன் வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்தால் கணிசமான நேரமும் பிடிக்கும். இக்காரணத்தினால் கணினியின் வேகம் குறைய வாயுப்புகள் அதிகம்.