Monday, June 14, 2010

உபுன்டுவை (Edubuntu) பயன்படுத்தி பள்ளிகளில் விளையாட்டின் மூலம் கல்வி

,உலகில் லினக்ஸ்(Linux) என்கிற இலவச operating system-த்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு துறைகளில் இதன் பயன்பாட்டை காணலாம். லினக்ஸ்சில் பல்வேறு சுவைகள் (flavours) உள்ளன. அவர் அவர் தேவைக்கு எற்றார்போல லினக்ஸ் கிடைக்கின்றது. அந்த வரிசையில் வீட்டு உபயோகத்திற்கான மென்போருள்களில் Ubuntu, Fedora, Open SUSE மற்றும் Mandriva போன்றவைகள் மிக பிரபலமானவை.




உபுன்டுவை பயன்படுதுவோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. உபுன்டு தமிழ் மொழியில் கூட கிடைக்கிறது. உபுன்டுவின் கிளை operating system-மாக கல்விக்கான உபுன்டு உருவாகிஉள்ளது. இதில் 4 வயது முதல் 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான கல்வி மென்பொருள்கள் உள்ளன.
கல்விக்கான உபுன்டுவில் உள்ள அனைத்து மென்பொருள்களும் இலவசம் தான். ஆம் முற்றிலும் இலவசம்! 

விளையாட்டு முறையை பயன்படுத்தி காட்சி மற்றும் ஒளி முலம் பாடங்கள் சொல்லிகொடுக்க படுகின்றன. எழுத்து, சிந்தனை, கவனிக்கும் மற்றும் ஆராயும் திறன்களை வளர்க்கும் விதமாக இவை அமைந்துள்ளன. மாணவர்கள் எளிதாக கணினியை பயன்படுத்தவும் கற்று கொள்கிறார்கள்.

கல்விக்கான உபுன்டுவில் கற்பிக்க படும் சில பாடங்கள் பின் வருமாறு...
கணிதம், வேதியியல், ஓவியம், இயற்பியல், ஆங்கிலம், நினைவாற்றல் மற்றும் வானவியல்.

இது மட்டும் அல்ல ஆசிரியர்களுக்கு கூட இதில் சில மென்பொருள்கள் உண்டு. இதனை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டே அவர்கள் என்ன கற்றுகொள்கிறார்கள் என்பதையும் கவனிக்க முடியும். அனைத்து மாணவர்களின் திறன் மற்றும் சிந்தனை ஆற்றலை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். பின் அதற்கு ஏற்றாற்போல் பாடத்தை மாற்றி அமைக்கவும் இது உதவும்.

இதனை பயன்படுதுவதற்கு தேவை ஒரு நடுத்தர சக்தி கொண்ட கணிப்பொறி தான். அல்லது ஏற்கனவே பள்ளிகளில் இருக்கும் கணிப்பொறி வசதிகளே இதற்கு போதுமானது. கல்விக்கான உபுன்டுவை கணினியில் நிருவுவது சுலபம். அதன் பிறகு மென்பொருள்களை சேர்ப்பதும் நீக்குவதும் மிக சுலபான ஒன்றே. உபுன்டுவை நிறுவ 5GB இட வசதி மற்றும் ஒரு ஒலிப்பான் (speaker) போதுமானது.

இவ்வாறு கல்விக்கான உபுன்டு மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். கணினி வழியாக தரமான கல்வி அளிக்க பள்ளிகளுக்கு இது ஒரு செலவற்ற சுலபமான முறை.

மேலும் விவரங்கள் பெற இங்கு கிளிக் செய்யவும்.
புதிய கல்விக்கான உபுன்ட்டு டோவ்ன்லோடுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

3 comments:

நளினி சங்கர் said...

நல்லா இருக்கு சரவணா... வழக்கமான தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்...
நன்றி சரவணன்...

www.vallalphysics.com said...

Really, this is good message to the people. It has to be reached the people as much as possible to get awareness about the same. Keep it up saran....keep on placing your good information in your website...........

varnaroopam said...

கணணியில் இருந்து மொபைல் க்கு blutooth எப்படி செயல் படுத்துவது ?

Post a Comment