Saturday, June 5, 2010

ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது - பாகம் 2

சென்ற இடுகையில் ஆடேசிட்டி மென்பொருளினை எவ்வாறு நிருவுவது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது என்று  இந்த பதிவில் பார்போம். டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு மென்பொருள்களையும் முதலில் நிறுவவேண்டும் (install)

1. அதன் பிறகு ஆடேசிட்டியை ஓபன் செய்யவும்.
   

2. File-->Open என்கிற மெனுவை கிளிக் செய்து பிடித்தமான பாடலை திறக்கவும்.              
                             
 

3. பாடல் திறந்த பிறகு அலை அலையாக கீழுள்ள படத்தில் உள்ளது போல் தோன்றும். 

 

4. பாடலளில் இருந்து விருப்பமான பகுதியை மட்டும் கர்சர் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்பட்ட பகுதி வேறு நிறத்தில் காட்சி அளிக்கும். இதை நான் அம்பு குறி கொண்டு படத்தில் சொல்லிருக்கிறேன். Edit-->Copy என்று கிளிக் செய்து ரிங்டோனுக்கான பகுதியை காபி செய்யவும். 

 

5. பிறகு File-->New என்று கிளிக் செய்து புதிய ஒரு ஆடேசிட்டி வின்டோவினை ஓபன் செய்யவும். அதில் Edit-->Paste என்று கிளிக் செய்யவும். உங்களுக்கு விருப்பமான பகுதியினை மட்டும் கொண்ட ரிங்டோன் இந்த கோப்பில் இருக்கும்


6. இப்போது ரிங்டோன் தயார். அதை mp3 வடிவில் சேமிக்க வேண்டும். File-->Export as mp3 என்று கிளிக் செய்தால் முதன்முறை மட்டும் lame_enc.dll என்கிற கோப்பு வேண்டும் என்று செய்தி வரும். LAME மென்பொருளை நிறுவிஇருந்தால் அந்த கொப்பு கணினியில் தான் இருக்கும். அந்த இடைதை காண்பித்தால் மட்டும் போதும்.

 

7. அந்த கொப்பு கிடைத்தவுடன் ரிங்டனே mp3 வடிவில் தயாராகிவிடும். பிறகு அதனை நுன்பேசியில் பதிவு செய்து பயன்படுத்தலாம். மெசேஜ் டோன் கூட இதேமுறையை பயன்படுத்தி செய்யலாம்.

 

ஏதேனும் ச்ந்தேகங்கள் இருப்பின் அதை பின்னூட்டத்தில் குறிப்ப்டவும். உங்க்ள் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்திசெய்ய முயற்சிக்கின்றேன்.

5 comments:

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் நண்பரே

நளினி சங்கர் said...

தம்பி! உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்கறன்.

S. Philip Raja said...

Thank you for introducing this software tool for us. I will try it and post my experience.

www.vallalphysics.com said...

Ungalala mattum eppadi saran mudiyuthu.........Really u r the king in the computer. I try to use this software soon, if i have any doubt in this, i make call u. Moreover, i convey the same to my friends.

Unknown said...

இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு இத்தனை நாள் பயன்படுத்த தெரியாமல் இருந்தேன்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

-அன்புடன் பல்லவன்

Post a Comment