Monday, June 28, 2010

கணினியின் செயல்படுவேகத்திறனை குறைக்கவிடாமல் பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள் – பாகம் 1

கணினியை தினமும் பயன்படுத்தினால் அதன் செயல்பாடு திறன் நாள் அடைவில் குறைந்து விடுகிறது, என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அதற்கு முக்கியமான காரணம் operating system-தினால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகள் மற்றும் registry என்கிற மென்பொருள் பதிவேடும் தான். Operating System திறன்பட இயங்க இந்த தற்காலிக கோப்புகள் மிக முக்கியமானவை. ஆனால் அதன் வேலை முடிந்த உடன் தற்காலிக கோப்புகள் தேவையற்ற ஒன்று தான். தொடர் உபயோகத்தினால் தற்காலிக கோப்புகள் மலை போல சேர்ந்து கொண்டே வரும். அதனால் hard disk-யில் இடம் குறைத்து கொண்டே வருவதனால் operating system மெதுவாக இயங்கும். Windows Operating System தானாக எல்லா தற்காலிக கோப்புகளையும் அழிக்காது.

Monday, June 14, 2010

உபுன்டுவை (Edubuntu) பயன்படுத்தி பள்ளிகளில் விளையாட்டின் மூலம் கல்வி

,உலகில் லினக்ஸ்(Linux) என்கிற இலவச operating system-த்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு துறைகளில் இதன் பயன்பாட்டை காணலாம். லினக்ஸ்சில் பல்வேறு சுவைகள் (flavours) உள்ளன. அவர் அவர் தேவைக்கு எற்றார்போல லினக்ஸ் கிடைக்கின்றது. அந்த வரிசையில் வீட்டு உபயோகத்திற்கான மென்போருள்களில் Ubuntu, Fedora, Open SUSE மற்றும் Mandriva போன்றவைகள் மிக பிரபலமானவை.

Saturday, June 5, 2010

ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது - பாகம் 2

சென்ற இடுகையில் ஆடேசிட்டி மென்பொருளினை எவ்வாறு நிருவுவது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக ஆடேசிட்டியை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோனை உருவாக்குவது என்று  இந்த பதிவில் பார்போம். டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு மென்பொருள்களையும் முதலில் நிறுவவேண்டும் (install)

உங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உருவாக்க ஒரு எளிமையான மென்பொருள் -அறிமுகம்.

பிடித்தமான பாடல்களில் இருந்து ரிங்டோனை உருவாக்குவது சுலபம் இதற்கு தேவை ஒரு இலவச மென்பொருள் தான். ஆடேசிட்டி  (Audacity) மென்பொருள் இலவச டவுன்லோடாக கிடைக்கிறது  இதனை பயன்படுத்தி mp3 பாடல்களில் இருந்து விருப்பமான ரிங்டோனை கட் செய்து நுன்பேசியில் வைத்துக்கொல்லலாம் . அதுமட்டும் அல்ல மெசேஜ் டோன் கூட செய்யலாம். ஆடேசிடி மென்பொருள் டவுன்லோடு செய்ய இங்கு  கிளிக்கவும் 


ஆடேசிட்டி பாடல்களை திருத்தியமைக்க பயன்படும் மென்பொருள். இதனை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோன கட் செய்வது போன்ற விவரங்கள் மென்பொருளின் உதவி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ரிங்டோன மற்றும் மெசேஜ் டோன் mp3 வடிவில் வேண்டும் என்றால் லாமே (LAME) என்கிற துணை மென்பொருள் தேவை. இதுவும் இலவச டவுன்லோடுதான். லாமேயினை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு மென்பொருட்களையும் பயன்படுத்தும் வழி முறைகள் அடுத்த பதிவுகளில் இடம் பெறும்...